’அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே”....ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (16:17 IST)
ஆந்திரா கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள, சந்திரபாபு நாயுடுவால் கட்டப்பட்ட பிரஜா வேதிகா அரசு கட்டடத்தை இடிக்க போவதாக, ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது பிரஜா வேதிகா அரசு கட்டடம். இந்த கட்டடம், ஆந்திராவின் முன்னால் முதல்வரான சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கட்டப்பட்டது.

இந்நிலையில் இன்று பிரஜா வேதிகாவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அக்கூட்டத்தின் முடிவில் ஜெகன் மோகன், இப்போது இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கிற பிரஜா வேதிகா கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடம் என்று கூறினார்.

அதன் பின்பு, நாளை காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற உள்ளதால், நாளை மறுநாள் இந்த அரசு கட்டடம் இடிக்கப்படும் என அறிவித்தார்.

இதனை கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் மூழ்கினர். மேலும் இதனை குறித்து ஜெகன் மோகன் ரெட்டி, சட்டம் என்பது எல்லோருக்கும் சமமான ஒன்று எனவும், விதிகளை மீறி கட்டினால், அது அரசு கட்டடமாக இருந்தாலும் அதை இடிப்பது தான் நியாயம் என்றும் கூறினார்.

இந்த செய்தி, ஆந்திராவின் முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சித் தொண்டர்களுக்கு பெரும் கோபத்தை விளைவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்