காமன்வெல்த் போட்டியில் பதக்கம் பெற்ற வீராங்கனைக்கு ராணுவத்தில் வேலை!
புதன், 5 அக்டோபர் 2022 (08:31 IST)
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் பெற்ற வீராங்கனைக்கு ராணுவத்தில் வேலை!
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் பெற்ற வீராங்கனைக்கு இந்திய ராணுவத்தில் பணி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் குத்துசண்டை பிரிவில் இந்திய வீராங்கனை ஜஸ்மின் லம்போரியா என்பவர் வெண்கல பதக்கம் பெற்றார்
இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற ஜேஸ்மினுக்கு இந்திய ராணுவத்தில் காவல் படையில் ஹவில்தார் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Edited by Siva
ஏற்கனவே ஒரு சில விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜேஸ்மினும் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது