இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறிய போது கருணை அடிப்படையில் வேலை வழங்குவது என்பது ஒரு சலுகையே தவிர உரிமை இல்லை என்றும் திடீரென ஒரு குடும்பத்தில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கவே குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க படுகிறது என்றும் ஆனால் அந்த வேலையை உரிமையாக கேட்டு வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது