ஆனால் அதே நேரத்தில் சரியாக வேலை செய்யாத மற்றவர்களை கண்டித்து வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ஆனந்தனை மற்ற கட்டிட தொழிலாளர்கள் திட்டி உள்ளனர். நீ நன்றாக வேலை செய்வதால் நாங்கள் திட்டு வாங்குகிறோம் என்றும், நீயும் எங்களை போல் வேலை செய் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாடியில் மது அருந்த ஆனந்தனை சக்திவேல் பிரசாந்த் சீனிவாசன் உள்ளிட்டோர் அழைத்து அழைத்தனர். மது அருந்திய போது கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து ஆனந்தனை கீழே தள்ளி கொலை செய்துவிட்டு மதுபோதையில் கீழே விழுந்ததாக நாடகமாடினார்கள். ஆனால் போலீஸ் விசாரணையில் இது கொலை என தெரிய வந்ததை அடுத்து நாடகமாடிய கட்டிட தொழிலாளிகள் சக்திவேல் , பிரசாந்த், சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.