ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை என தகவல்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (18:01 IST)
சற்றுமுன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்திற்கு உட்பட்ட சோபியான் நாக்பால் என்ற பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது 
 
இதனை அடுத்து அந்த பகுதிக்கு காவல்துறையினர், பாதுகாப்பு படையினர் சென்றபோது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர சண்டை நடந்தது
 
இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது 
 
மேலும் தற்போது தொடர்ந்து சண்டை நடந்து வருவதாகவும் இந்த என்கவுண்டர் குறித்த முழு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்