ஜம்மு-காஷ்மீர்: துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

செவ்வாய், 31 மே 2022 (09:44 IST)
தெற்கு காஷ்மீர் பகுதியிலுள்ள அவந்திபுரா பகுதியில், இன்று இரண்டு பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையின் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


ஏஎன்ஐ செய்தியின்படி, பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவந்திபுராவில் இருக்கும் ராஜ்புரா பகுதியில் திங்கள் கிழமை மாலை துப்பாக்கிச் சூடு தொடங்கியது. அந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் டிரால் பகுதியில் வசித்த ஷாஹித் ராத்தெர் என்றும் மற்றொருவர் ஷோபியானில் வசித்த உமர் யூசுஃப் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரிபால் பகுதியைச் சேர்ந்த ஷகீலா என்ற பெண்ணின் கொலையிலும் ஜாவித் அகமத் என்ற அரசு ஊழியரின் கொலையிலும் ஷாஹித் சம்பந்தப்பட்டிருந்ததாக காஷ்மீர் ஐ.ஜி விஜய் குமார் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அதோடு, இரண்டு ஏகே47 ரக துப்பாக்கிகளை சம்பவ இடத்திலிருந்து காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்