போலி சர்டிபிக்கெட் கொடுத்து நீதிபதியான நபர்! – பணி நீக்கம் செய்த ஆளுனர்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (09:55 IST)
காஷ்மீரில் போலி ஆவணங்கள் கொடுத்து இடஒதுக்கீட்டில் நீதிபதி ஆனவர் தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியனில் கடந்த 2000ம் ஆண்டு நீதிபதி பதவியில் சேர்ந்தவர் முகமது யூசுப் அல்லை. இவர் பணியில் சேரும்போது ரிசர்வ்ட் பேக்வர்ட் ஏரியா எனப்படும் பின்தங்கிய பகுதியான ஷில்வட் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் என சான்றிதழ் காட்டி அதன்படி கிடைத்த இட ஒதுக்கீட்டில் நீதிபதி பதவியை அடைந்துள்ளார்.

ஆனால் அவர் குறிப்பிட்ட அந்த கிராமப்பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பது சமீபத்தில் ஆய்வறியும் குழுவால் கண்டறியப்பட்டதால் அவர் பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து யூசுப் மேல்முறையீடு செய்த நிலையில் அவர் போலி சான்றிதழ் அளித்தது உறுதியானதால் நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய துணை நிலை ஆளுனருக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதன்படி யூசுப் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்