தீவிரமடையும் ஜாபர் சாதிக் வழக்கு..! களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ..!!

Senthil Velan
புதன், 13 மார்ச் 2024 (16:39 IST)
போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் வழக்கு ஆவணங்களை டெல்லி என்.ஐ.ஏ. கேட்டுள்ளது.
 
டெல்லியில் கடந்த மாதம், ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்தது. 
 
ஜாபர் சாதிக் இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 500 கிலோ 'சூடோபெட்ரின்' என்ற போதைப்பொருள் தயாரிப்பு வேதிப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தி இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இதற்கிடையே, தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் வழக்கு ஆவணங்களை டெல்லி என்.ஐ.ஏ. கேட்டுள்ளது. பணப் பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் இருந்து என்.ஐ.ஏ. கோரியுள்ளது. 

ALSO READ: தமிழ்நாட்டிற்கு நீர் தர முடியாது..! கர்நாடக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!!
 
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சென்றுள்ளதாக என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்