இந்தோனேசிய விமான விபத்து எதனால் நடந்தது? வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (13:20 IST)
இந்தோனேசிய விமான விபத்தில் 189 பேர் பலியான சம்பவம் உலக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விபத்திற்கான முக்கிய காரணம் வெளியாகியுள்ளது.
 
கடந்த 29 ஆம் தேதி இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்ற லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் JT610 பயணிகள் விமானம் ஜாவா கடற்கரையில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 189 பேரும் பலியாகினர். இறந்தவர்களின் உடல்களை மீட்க மீட்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த விமானத்தில் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
 
இந்த விபத்திற்காக காரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது. விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் விமானத்தின் வேகம் குறைந்திருக்கிறது. இதனால் தான் விமானம் விபத்தில் சிக்கி இந்த பேரிழப்பு நடைபெற்றிருக்கிறது. இந்த விமானம் சமீபத்தில் தான் சர்வீஸுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்