நடுவானில் கிரிக்கெட் ஸ்கோர் கேட்ட பயணி! விமானி செய்த செயல்? – வைரலான சம்பவம்!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (09:49 IST)
உலகக்கோப்பை டி20 ஸ்கோரை பயணி கேட்டதால் விமானி ஒருவர் எழுதி கொடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளையாட்டுகளிலேயே கிரிக்கெட் மீது இந்தியர்களுக்கு எப்போதுமே ஒரு அலாதி பிரியம். ரேடியோவில் ஸ்கோர் கேட்பதில் தொடங்கி தற்போது தொலைக்காட்சி, மொபைலிலும் கூட கிரிக்கெட் பார்ப்பது பலருக்கு வழக்கமாக உள்ளது.

வேலை காரணமாக வெளியே இருந்தால் கிரிக்கெட் பார்க்க முடியாவிட்டால் கூட பக்கத்தில் உள்ளவர்களிடம் கூட ஸ்கோர் என்ன என கேட்பது இந்தியர்களின் வழக்கம். அப்படியான ஒரு சம்பவம் விமானத்திலேயே நடந்துள்ளது.

இண்டிகோ விமானம் ஒன்று நடுவானில் பறந்துக் கொண்டிந்தபோது இந்தியா – தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை டி20 போட்டி நடந்துக் கொண்டிருந்துள்ளது. விமானத்தில் செல்போனில் இணைய சேவைகள் பெற முடியாது என்பதால் பயணி ஒருவர் கிரிக்கெட் ஸ்கோர் தெரியாமல் தவித்துள்ளார். இதனால் விமான பணிப்பெண்ணிடம் கிரிக்கெட் ஸ்கோர் தெரிய வேண்டுமென கேட்டுள்ளார்.


இதனால் விமானத்தை இயக்கிய விமானி கிரிக்கெட் ஸ்கோரை டிஷ்யூ பேப்பரில் எழுதி பயணிக்கு கொடுத்து அனுப்பியுள்ளார். இதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் இந்த செயலால் இண்டிகோ தனது மனதை கவர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக இண்டிகோ விமானங்கள் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகிய சம்பவங்களுக்கு நடுவே இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்