உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர்  நடத்தி வரும் நிலையில், ரஷிய விமானிகளை ராணுவத்தில் சேர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
	 
	உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாகப் போர் நடத்தி வருகிறது. இந்தப் போரில் இரு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், சிறுவர்களும், ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியாவில் உள்ள விமான் நிலைய ஊழியர்களையும்,   ஓய்வு பெற்ற ராணுவத்தினரையும்  ராணுவத்தில் சேர்க்க புதின் அறிவிப்பு விடுத்துள்ளார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.