ஜூலை 18ல் குடியரசு தலைவருக்கான தேர்தல்! – எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள்?

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (15:37 IST)
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் குடியரசு தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் குடியரசு தலைவராக தற்போது ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். குடியரசு தலைவருக்கான பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். ராம்நாத் கோவிந்தின் குடியரசு தலைவர் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் அடுத்த குடியரசு தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையன் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் மொத்தம் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜ்யசபா உறுப்பினர்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர். குடியரசு தலைவருக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்