கடந்த 24 மணி நேரத்தில் 7,240 புதிய பாதிப்பு - கொரோனா அப்டேட்!!

வியாழன், 9 ஜூன் 2022 (09:13 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல குறைந்து வந்த கொரொனா தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,240 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,97,522 ஆக உயர்ந்தது. புதிதாக 8 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,723 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,591 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,40,301 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32,498 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் 1,94,59,81,691 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,43,748 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்