மதுவகைகளை டோர் டெலிவரி செய்ய டாஸ்மாக் திட்டம்: ராமதாஸ் எதிர்ப்பு

திங்கள், 22 ஜனவரி 2018 (05:41 IST)
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும், மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் போராடி வரும் நிலையில் வீடுதேடி மதுவகைகளை டோர் டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை டாஸ்மாக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயர்வகை மதுபானங்களை வாடிக்கையாளர்களின் வீடு தேடிச் சென்று விற்பனை செய்ய டாஸ்மாக் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக டாஸ்மாக் நிர்வாகம் மொபைல் செயலி ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும், இந்த செயலி மிக விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை உள்பட பெரு நகரங்களில் இந்த செயலியின் மூலம் மதுவகைகளை ஆர்டர் செய்து ஆன்லைனில் பணம் செலுத்தினால் அவர்கள் ஆர்டர் செய்த மதுவகைகள் டோர் டெலிவரி செய்யப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது

டாஸ்மாக்கின் இந்த முயற்சிக்கு பாமக தலைவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'புதிய மதுக்கடைகள் திறப்பது, வீடுகளுக்கு நேரடியாக மது விற்பனை செய்வது போன்ற பயனற்ற வேலைகளை விடுத்து, முழு மதுவிலக்கை நடைமுறைப் படுத்த அரசு முன்வர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்