கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் மும்பையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ.80.10 ஆகும். இந்திய வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோலின் விலை ரூ.80ஐ தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மற்ற நகரங்களில் இன்னும் ரூ.80ஐ பெட்ரோல் விலை தொடவில்லை என்றும், ஆனால் இன்னும் ஒருசில நாட்களில் அனைத்து நகரங்களிலும் ரூ.80ஐ பெட்ரோல் விலை தாண்டிவிடும் என்றும் கூறப்படுகிறது
இன்று சென்னை மற்றும் கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.75ஆகவும், டெல்லியில் விலைரூ72.23ஆகவும் உள்ளது. அதேபோல் டீசலில் விலை மும்பையில் ரூ.67.10ஆகவும், சென்னை மற்றும் கொல்கத்தாவில் ரூ.66ஆகவும், டெல்லியில் ரூ.63ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது