செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை.. எலான் மஸ்க் ஆதரவாக மத்திய அரசின் முடிவு..!

Siva
வியாழன், 17 அக்டோபர் 2024 (07:33 IST)
செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, ஏலம் முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, எலான் மஸ்க் கூறியது போல் ஏலம் முறையின்றி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொலைதொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்கும் முயற்சியிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் எலான் மஸ்க் அவர்களின்  ஸ்டார் லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு ஏலம் நடத்தி உரிமை வழங்க வேண்டும் என்று ஜியோ நிறுவனம் கோரிக்கை விடுத்த நிலையில், அந்த கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு ஏலம் நடைமுறை இல்லை என்றும், உலக நடைமுறைப்படி தான் இந்தியாவிலும் ஏலம் நடைமுறை இன்றி நிர்வாக ரீதியான ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு எலான் மஸ்க் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் இணையவழி சேவையை ஆரம்பித்தால், ஜியோ மற்றும் ஏர்டெல் கடும் போட்டியை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்