அமெரிக்காவின் நிர்வாக உத்தரவின் காரணமாக, $800 வரையிலான இறக்குமதி பொருட்களுக்கு இருந்த சுங்க வரி விலக்கு நீக்கப்பட்டதால், ஆகஸ்ட் 29 முதல் அனைத்து தபால் ஏற்றுமதிகளுக்கும் வரி விதிக்கப்பட்டது. இந்த வரிகளை சேகரிக்க வேண்டிய புதிய நடைமுறைகள் நடைமுறையில் இல்லாததால், தபால் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த சிக்கலைத் தீர்க்க, இந்தியா போஸ்ட் 'டெலிவரி டியூட்டி பேய்ட் என்ற புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது. இந்த DDP மாதிரியின் கீழ், கப்பல் அனுப்பும்போது பொருந்தும் 50% சுங்க வரி இந்தியாவிலேயே முன்பணமாக சேகரிக்கப்பட்டு, அமெரிக்க அதிகாரிகளிடம் செலுத்தப்படுகிறது. இது அமெரிக்கச் சுங்க அனுமதி மற்றும் விநியோகத்தை விரைவுபடுத்தும்.
இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள், கைவினைஞர்கள் மற்றும் மின் வணிக ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பொருட்களை செலவு குறைந்த முறையில் அமெரிக்காவுக்கு அனுப்ப முடியும். தற்போதைய தபால் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தபால் துறை உறுதிப்படுத்தியுள்ளது.