ஹெச்-1பி விசா கட்டணத்தை எவ்வளவு உயர்த்தினாலும் கவலைப்பட மாட்டோம்: டிசிஎஸ் அதிரடி அறிவிப்பு..!

Siva

செவ்வாய், 14 அக்டோபர் 2025 (10:01 IST)
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்த்தப்பட்டதால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலைகள் எழுந்தன. இதற்கு பதிலளித்த டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி கே. கிருதிவாசன், தங்கள் நிறுவனம் ஹெச்-1பி விசாவை சார்ந்து இயங்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
 
அமெரிக்காவில் டிசிஎஸ்-இன் 32,000 ஊழியர்களில் சுமார் 12,000 பேர் மட்டுமே ஹெச்-1பி விசாவில் உள்ளனர். நடப்பு ஆண்டில் வெறும் 500 ஊழியர்கள் மட்டுமே அந்த விசாவில் அனுப்பப்பட்டுள்ளனர். எனவே, விசா இல்லாமலும் நிறுவனம் திறம்பட செயல்படும் என்று கிருதிவாசன் உறுதியளித்தார்.
 
பணிநீக்க நடவடிக்கைகளை குறித்துப் பேசிய அவர், பணி ஒதுக்கப்படாமல் காத்திருப்போரையும் மற்றும் செயல்திறன் குறைந்தவர்களையும் மட்டுமே இந்த நடவடிக்கை பாதிக்கும் என்றும், இது மனிதநேயத்துடன் நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டார். 
 
செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை தயார்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்