ஒடிசாவை சேர்ந்த இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவி, அவரது நண்பருடன் அக்டோபர் 10 அன்று கல்லூரி வளாகத்திலிருந்து வெளியே வந்தபோது, சிலரால் வழிமறிக்கப்பட்டு வனப்பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய காவல் ஆணையர் சுனில் குமார் சவுத்ரி, இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரிடமிருந்து பறிக்கப்பட்ட கைப்பேசி மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், காவல்துறை விசாரணையில் மாணவி ஒரு நபரால் மட்டுமே வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.