ஹரியானா மாநிலம் ரோதக்கில், உதவி ஆய்வாளர் சந்தீப் குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அம்னீத் பூரன் குமாரை கைது செய்யும் வரை சந்தீப்பின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய மறுத்து, சடலத்தை சொந்த கிராமத்திற்குக் கொண்டு சென்று போராட்டத்தில் சந்தீப் மனைவி ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லஞ்ச வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரியின் துப்பாக்கி ஏந்திய காவலரை சந்தீப், கைது செய்ததால், ஐ.ஏ.எஸ். அதிகாரியால் துன்புறுத்தப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்கொலைக்கு முன் சந்தீப் விட்டு சென்ற மூன்று பக்க கடிதம் மற்றும் காணொளி செய்தியில், மறைந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒய். பூரன் குமார் மீது ஊழல், சாதி அரசியல் மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நேர்மையான விசாரணை கோரியே தற்கொலை செய்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.