தீபாவளிக்கு பூமிக்கு வரும் புது விருந்தினர்கள்! வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண்கற்கள்! - எங்கே? எப்போது?

Prasanth K

புதன், 15 அக்டோபர் 2025 (10:42 IST)

அக்டோபர் மாதத்தில் பூமிக்கு மிக அருகே இரண்டு விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாகவும், அவற்றை வெறும் கண்களால் காண முடியும் எனவும் வானவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஆண்டுதோறும் பல விண்கற்கள் சூரிய குடும்பத்திற்குள் நுழைவதும், வெளியேறுவதும் வழக்கமாக இருந்தாலும், அவற்றில் சில மட்டுமே மனிதர்கள் வெறும் கண்களால் பார்த்தாலும் தெரியும் வண்ணம் மிக அருகில் கடந்து செல்கின்றன. அந்த வகையில் இந்த அக்டோபரில் ஒரே சமயத்தில் இரண்டு விண்கற்களை அப்படி வெறும் கண்களால் பார்க்கக் கூடிய வாய்ப்பு அமைந்துள்ளது.

 

வானவியலாளர்கள் தகவலின்படி, Comet R2 Swan மற்றும் Comet A6 Lemmon ஆகிய இரண்டு பெரிய விண்கற்கள் இந்த அக்டோபர் மாதத்தில் பூமியை கடந்து செல்ல உள்ளன. அக்டோபர் 21 தீபாவளிக்கு மறுநாள் நிறைந்த அமாவாசை நாளில் இந்த இரண்டு விண்கற்களும் சூரியன் மறைந்த சில மணி நேரங்களில் தெளிவாக காணும் வகையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 22-23 தேதிகளில் இவை கூடுதல் வெளிச்சத்தோடு காணப்படும் என கூறப்படுகிறது.

 

இந்த விண்கற்களை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகான கிழக்கு வானத்தில் தெளிவாக காணலாம் என கூறப்பட்டுள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்