வர்த்தக போரை எதிர்கொள்ள தயார்.. டிரம்பின் கூடுதல் 100% வரி விதிப்பிற்கு சீனா சவால்..!

Siva

செவ்வாய், 14 அக்டோபர் 2025 (08:09 IST)
வரும் நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து சீனாவுக்கு கூடுதலாக 100% வரி விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டி உள்ள நிலையில், இந்த வர்த்தக போரை சந்திக்க தயார் என்று சீனா சவால் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சீனா மீது கூடுதலாக 100% வரி விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். சீனா தனது தாது மணல் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதித்ததற்கு பதிலடியாகவே இந்த அறிவிப்பு என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இறுதிவரை போராட தயாராக இருப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது. வரி மற்றும் வர்த்தக போரில் சீனாவின் நிலைப்பாடு நிலையாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.
 
எனவே, அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் மேலும் வலுவடைவதால், உலக பொருளாதாரத்திற்கே ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்