ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் ஆயுதப்படைகள், உளவுத்துறை இயந்திரங்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளன என்று கூறப்படுகிறது. இதற்காக ரூ.22500 செலவில் உளவு செயற்கைக்கோள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த நிலையில் 52 உளவு செயற்கை கோள்கள் தயாரிக்கப்படும் என்றும், இதில் 32 செயற்கை கோள்கள் செய்யும் பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.