இந்திரா காந்தி பண்ணுனது வேற.. மோடி கரெக்ட்டான ரூட்ல போயிட்டிருக்கார்!? - காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து!

Prasanth Karthick

திங்கள், 12 மே 2025 (09:26 IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்த காங்கிரஸின் விமர்சனத்திற்கு நேர்மாறான கருத்தைக் கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரில் அமெரிக்கா சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் 1971ல் நடந்த போரில் இந்திரா காந்தி அமெரிக்காவிற்கு எதிராக வலுவாக செயல்பட்டதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியை விமர்சித்து வந்தனர்.

 

இந்நிலையில் காங்கிரஸின் இந்த கருத்தோடு கேரளா காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மாறுபட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ஒரு இந்திய நாட்டின் குடிமகனாக 1971 போரில் இந்திரா காந்தியின் துணிச்சல் நடவடிக்கைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால் தற்போதைய நிலைமை 1971ல் இருந்து வேறுபட்டது. அப்போது வங்கதேச சுதந்திரத்திற்காக இந்தியா தோள் நின்றது. வங்கதேச விடுவிப்பே இந்தியாவின் இலக்காக இருந்தது.

 

ஆனால் இன்றைய போராட்டத்தின் குறிக்கோள் பயங்கரவாதிகளை ஒழிப்பதும், அவர்களை அனுப்பியவர்களுக்கு பாடம் கற்பிப்பதும் ஆகும். அதற்கான விலையை அவர்கள் கொடுத்தால் போதும். அது நடந்துவிட்டது. அதற்கு மேலும் போரை நீடிப்பதில் அர்த்தம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்