அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடனான தனது சந்திப்பின்போது, இந்தியா - பாகிஸ்தான் உட்பட ஐந்து போர்களை தானே மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக மீண்டும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே உக்ரைன் போர் குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.
இந்நிலையில் டிரம்ப் அவ்வப்போது இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று கூறி வரும் நிலையில் டிரம்பின் இந்த கூற்றை இந்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஆனாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து இந்த கருத்தை கூறிவரும் நிலையில் நேற்று அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தையின் போதும் புதினிடம் இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.