போர் நிறுத்தம் செய்தி எதிரொலி: சுமார் 2000 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

Siva

திங்கள், 12 மே 2025 (09:37 IST)
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தை சரிந்து கொண்டே இருந்தது. தற்போது போர் பதற்றம் நீங்கியுள்ள நிலையில், சென்செக்ஸ் சுமார் 2000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்திய பங்குச்சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2006 புள்ளிகள் உயர்ந்து 81,435 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நெற்றி 614 புள்ளிகள் உயர்ந்து 24,623  என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையை பொறுத்தவரை சிப்லா, சன் பார்மா உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே குறைந்துள்ளன. மற்ற அனைத்து பங்குகளும் மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறிப்பாக அப்பல்லோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, இன்போசிஸ் ஆகியவை இரண்டு சதவீத முதல் நான்கு சதவீதம் வரை உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்