பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு.. ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறிய முக்கிய தகவல்..!

Siva

திங்கள், 12 மே 2025 (10:04 IST)
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த முக்கிய தகவல்களை இந்திய ராணுவ அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர். பாகிஸ்தானால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா எவ்வாறு பதிலடி கொடுத்தது என்பதையும் தெளிவாக விவரித்தனர்.
 
இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி தெரிவித்ததாவது: பாகிஸ்தானின் முரிட்கே மற்றும் பஹவல்பூர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் கடந்த 7ஆம் தேதி இந்தியா நடத்திய விமான தாக்குதலில் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை பொதுமக்கள் பாதிக்கப்படாமல் மிக துல்லியமாக செய்யப்பட்டது. நமது குறிக்கோள் தீவிரவாத முகாம்கள் மட்டுமே; பாகிஸ்தான் ராணுவம் அல்லது அரசு அமைப்புகள் அல்ல.
 
அதே நேரத்தில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து நமது எல்லைக்கு எதிராக ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. அவற்றில் பலவற்றை இந்தியா நேரடியாக தடுத்து நிறுத்தியது. சில தாக்குதல்கள் நடந்தாலும், பெரிதாக சேதம் ஏற்படவில்லை.
 
பாகிஸ்தான் பொதுமக்கள் மற்றும் ராணுவ வளங்களை குறிவைத்த நிலையில், இந்தியா பாகிஸ்தானின் லாகூர், குஜ்ரன்வாலா ஆகிய இடங்களில் உள்ள ரேடார் மையங்களை தாக்கியது. தீவிரவாதிகளையே இலக்காக வைத்தோம் என்பது தெளிவாக கூறப்பட்டது.
 
அத்துடன், தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு கூட அனுமதி வழங்கியது பெரிய தவறு என விமானப்படை அதிகாரி கண்டனம் தெரிவித்தார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்