ஆயிரம் கோடி அடிக்கும் முடிவில் ‘கூலி’ மற்றும் ‘தக்லைஃப்’… ஓடிடி வியாபாரத்தில் எடுத்த அதிரடி முடிவு!

vinoth

திங்கள், 12 மே 2025 (08:52 IST)
ராஜமௌலியின் பாகுபலி படத்துக்குப் பிறகு இந்தியாவில் ‘பேன் இந்தியா சினிமா’ என்ற சொல் அதிகம் விவாதிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. பிராந்திய மொழிகளில் தங்களுக்கென்று ஒரு மார்க்கெட்டைக் கொண்டிருக்கும் நடிகர்கள் பிற மாநில மொழிகளிலும் சந்தையை விரிவாக்கி இந்தியா முழுவதும் பார்க்கப்படும் படங்களை உருவாக்க ஆசைப்படுகின்றனர்.

இதன் காரணமாக படங்களின் வசூல் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் முன்னணியில் தெலுங்கு சினிமாவும், அதற்கு அடுத்த இடத்தில் கன்னட சினிமாவும் உள்ளது. தெலுங்கு சினிமாவில் இதுவரை நான்கு படங்கள் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்க, கன்னட சினிமா கேஜிஎஃப் மூலமாக அதை சாதித்தது.

இதையடுத்து தமிழ் சினிமாவில் தற்போது யார் முதலில் 1000 கோடி ரூபாய் வசூல் சினிமாவைக் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 1000 கோடி ரூபாய் வசூலிக்காக ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் கமல்ஹாசனின் ‘தக்லைஃப்’ ஆகிய படங்கள் ஓடிடி வியாபாரத்தில் அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளனர்.

இந்த இரு படங்களும் திரையரங்கில் ரிலீஸாகி 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸாகும் என்ற விதமாக ஓடிடி நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளன. ஏனென்றால் 8 வாரங்களுக்குப் பின் ஓடிடி ரிலீஸ் என்றால்தான் வட இந்தியாவில் அதிகளவில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் எல்லாம் படத்தை ரிலீஸ் செய்வார்கள். ஆனால் இதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் நான்கு வாரங்களிலேயே ஓடிடி ரிலீஸ் என்று படங்கள் ரிலீஸாகின. ஆனால் இப்போது கூலி மற்றும்  தக் லைஃப் படக்குழுவினரின் இந்த முடிவால் வட இந்தியாவில் அதிக திரைகளில் இவ்விரு படங்களும் ரிலீஸாகி, வெற்றி பெறும் பட்சத்தில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யக் கூடிய சாத்தியமுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்