42 லட்சத்தை தாண்டிய கொரோனா! – இரண்டாவது இடத்திற்கு வந்த இந்தியா!

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (10:08 IST)
இந்தியாவில் கொரோனா தொற்று நாள் ஒன்றுக்கு 90 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 42 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 42,04,613 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உலக அளவில் அதிகமாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது.

மொத்தமாக இதுவரை 71,642 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 32,50,429 பேர் குணமடைந்துள்ளனர். எனினும் உலக அளவில் கொரோனா பாதிப்பில் மிக வேகமாக முன்னேறி இரண்டாம் இடத்தை அடைந்துள்ளதும், ஒருநாள் பாதிப்பு சராசரி 1 லட்சத்தை நெருங்கி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்