கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்தும் தகரம் அடிக்கப்பட்ட வீடு; ஓனர் போட்ட பேனர்!

திங்கள், 7 செப்டம்பர் 2020 (09:38 IST)
கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்தும் தங்களது வீடு தகரம் அடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதை நூதனமாக கண்டித்துள்ளார் வீட்டின் உரிமையாளர். 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் இந்த மாதம் பல தளர்வுகள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இன்னும் 80 சதவீதத்திற்கு அதிகமாக கொரோனா பாதிப்பு அடுத்த மாதங்களில் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 84,034 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51 லட்சத்து 26 ஆயிரத்து 231 ஆக அதிகரித்துள்ளது. 
 
இதனிடையே கோவையில் கொரோனா நெகட்டிவ் என ரிசலட் வந்தும் தங்களது வீடு தகரம் அடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதை நூதனமாக கண்டித்துள்ளார் வீட்டின் உரிமையாளர். போஸ்டரில், கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள். கோவிட்-19 இல்லாத 4 பேருக்கு கொரோனா இருக்கு என்ற முத்திரை குத்தி என்னையும் எனது குடும்பத்தாரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் என அவர் அடித்து வீட்டின் முன் மாட்டியுள்ளார்.
 
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு அரசின் அலட்சியத்தையும் மக்கள் விமர்சித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்