உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.72 கோடி பேராக உயர்ந்துள்ளது. அதாவது உலகம் முழுவதும் 27,288,586 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 19,370,858 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும், கொரோனா வைரஸ் தாக்கி உலகம் முழுவதும் 887,549 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 6,460,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 193,250 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இதுவரை மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா இன்று முதல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,202,562 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 71,687 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,247,297 என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,137,606 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 126,686 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,317,227 என்பதும் குறிப்பிடத்தக்கது