ஆனால் ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனவே கொரோனா வைரஸிலிருந்து குணமானவர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும், இதனை தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் அவருக்கு மீண்டும் கொரோனா வைரசின் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் 2வது முறையாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.