ஒருபக்கம் பேச்சுவார்த்தை; மறுபக்கம் ஆயுதங்கள் குவிப்பு! – என்ன நடக்கிறது லடாக்கில்?

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (08:18 IST)
இந்திய – சீன எல்லைப்பகுதியில் இரு நாடுகளுக்கு இடையேயும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இரு நாட்டு தரப்பிலும் ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியா – சீன எல்லைப்பகுதியான லடாக்கில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கடந்த மாதம் முதல் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இரு நாடுகளும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்துள்ளது. எனினும் இந்த பிரச்சினைக்கு சுமூக முடிவு காண சீன – இந்திய முக்கிய அதிகாரிகள் , அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரு நாடுகளும் எல்லைப்பகுதியில் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களையும், ராணுவ தளவாடங்களையும் குவித்து வருகின்றன.

இதனால் லடாக் பகுதியில் போர் பதற்றம் எழுந்துள்ளது. எனினும் இதை சுமூகமாக பேசி தீர்ப்பதற்கான அனைத்து வழிகளையும் இந்தியா மேற்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்