திரைப்படமாகிறது கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு: நடிப்பது யார்?

திங்கள், 1 ஜூன் 2020 (18:20 IST)
திரைப்படமாகிறது கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்த பெண்மணி பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி என்பது தெரிந்ததே. இவர் கடந்த 1993 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றார். பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட மல்லேஸ்வரி, 2004 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பளுதூக்கும் போட்டியில் சாதனை புரிந்த கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தற்போது உருவாகவுள்ளது. இன்று கர்ணம் மல்லேஸ்வரியின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபல தயாரிப்பு நிறுவனம் கோனா பிலிம்ஸ் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிப்பதற்காக பெருமை கொள்வதாக கூறியுள்ளது
 
சஞ்சனா ரெட்டி என்பவர் இயக்கும் இந்த படத்தில் கர்ணம் மல்லேஸ்வரியாக நடிப்பதற்கு 4 நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் விரைவில் இறுதி செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் ஏற்கனவே தோனி, சச்சின், மேரிகோம், மிதாலிராஜ் உள்பட பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் போல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இயக்குனர் சஞ்சனா ரெட்டி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்