தனிநபர் கருத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை! – இந்தியா விளக்கம்!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (13:58 IST)
நபிகள் நாயகம் குறித்து பேசியவர் மீது நடவடிக்கை எடுத்த பிறகும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு உள்நோக்கத்துடன் பேசுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதரான நபிகள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்த சவுதி மக்கள் இந்திய பொருட்களை புறக்கணிப்பதாக ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.

இதுகுறித்து பாஜக விளக்க கடிதம் வெளியிட்டுள்ளதோடு, தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியும் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இந்தியா குறித்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருத்துகள் இந்தியாவிற்கு அதிருப்தியை அளித்துள்ளன.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா “நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவினர் மீது அந்த கட்சி கடும் நடவடிக்கை எடுத்துவிட்ட பிறகும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு உள்நோக்கத்துடன் கருத்து வெளியிடுகிறது. அனைத்து மதங்களையும் இந்திய அரசு மிகவும் மதிப்புடன் அணுகுகிறது. நபிகள் நாயகம் குறித்த தனிநபர் கருத்திற்கும் இந்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை” என மீண்டும் விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்