சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் தீ விபத்து! – தீயணைக்கும் பணி தீவிரம்!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (13:39 IST)
சென்னையில் செயல்பட்டு வரும் ரஷ்ய கலாச்சார மையத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் ரஷ்ய கலாச்சார மையம் செயல்பட்டு வருகிறது. ரஷ்ய மொழி பயிற்சி, திரைப்படங்கள் திரையிடல் என கடந்த பல ஆண்டுகளாக இந்திய – ரஷ்ய கலாச்சாரத்திற்கு பாலமாக இந்த கலாச்சார மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று ரஷ்ய கலாச்சார மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்