ஜி20 உச்சிமாநாட்டில் இந்தியாவுக்கு பாரத் பெயர்ப்பலகை.. பெயர் மாற்றப்பட்டுவிட்டதா?

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (11:17 IST)
டெல்லியில் இன்று ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பாட்  பல உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரத பிரதமர் மோடியின் இருகைக்கு முன் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா என்ற நாட்டை பாரத் என பெயர் மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தின் போது தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது ஜி 20 மாநாட்டில் பிரதமரின் முன் நாட்டை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பாரத் என்ற பெயர் பலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
இந்த பெயர் பலகையை பார்க்கும்போது பாரத் என பெயர் மாற்றப்பட்டதா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்