பிரதமர் மோடியின் முயற்சிக்கு மன்மோகன் சிங் ஆதரவு..!

வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (17:50 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ரஷ்யா உக்ரைன் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்த பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிக்கு தனது ஆதரவு என்று கூறியுள்ளார். 
 
ரஷ்யா உக்ரைன் இடையிலான மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தி வருவதை நான் பாராட்டுகிறேன் என்றும் இந்த முயற்சியில் இந்தியா வெற்றி பெறும் என்றும், இந்திய இறையாண்மை மற்றும் பொருளாதாரம் பாதிக்காத வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார். 
 
அமைதியான ஜனநாயகம், அரசியல் அமைப்பு மதிப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகியவற்றை கொண்டு இந்தியா புதிய உலகை வழி நடத்தும் என்றும்  அவர் தெரிவித்தார். இந்தியா ஒரு இணக்கமான சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்