கட்டற்ற வெள்ளத்தின் நடுவே உயிருக்கு போராட்டம்! கைகொடுத்த விமானப்படை! – வீடியோ

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (09:40 IST)
இந்தியாவின் வட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சத்தீஸ்கரில் வெள்ளத்தில் நடுவே சிக்கியவரை இந்திய விமான படையினர் மீட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பிலஸ்பூர் பகுதியில் உள்ள அணை ஒன்றில் கனமழை காரணமாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ள சூழலில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் நபர் ஒருவர் சிக்கிக் கொண்டுள்ளார்.

ஆற்றின் நடுவே இழுத்து செல்லப்படும் நிலையில் கிடந்த மரம் ஒன்றை பிடித்தபடி நீண்ட நேரமாக உயிருக்கு போராடி கொண்டிருந்தவர் குறித்து அப்பகுதி மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக ராணுவ ஹெலிகாப்டரில் விரைந்த விமான படை மீட்பு வீரர்கள் கயிற்றை கொண்டு ஆற்றின் நடுவே இறங்கி அந்த நபரை பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்