LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

Siva

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (18:37 IST)
கடந்த சில ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை  இழந்திருந்த LIC நிறுவனம், இப்போது திடீரென கோடி கணக்கில் லாபத்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், LIC பங்குகளை வைத்திருப்பவர்கள், 'ஜாக்பாட்' அடித்ததாக சந்தையில் பேசப்படுகிறது.
 
இதற்கான முக்கிய காரணமாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பங்குகளில் ஏற்பட்ட உயர்வுதான். கடந்த வாரம் இந்த நிறுவத்தின் பங்குகள் 3% வரை உயர்ந்துள்ளன. இந்துஸ்தான் மோட்டார்ஸில் LIC நிறுவனம் 27.49 லட்சம் பங்குகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இவ்வளவு பங்கு வைத்திருப்பதால், பங்கு மதிப்பு உயர்ந்ததன் நேரடி பலனாக LIC-க்கு கோடிக்கணக்கில் லாபம் ஏற்பட்டுள்ளது. மார்ச் 2025 தேதியின்படி, LIC-ன் பங்கு வைத்திருப்பு சுமார் 1.3% ஆகும். இதனுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தங்கள் பங்குகளை அதிகரித்து வருகின்றனர். 2024 டிசம்பரில் 0.05% இருந்தது, தற்போது 0.14% ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், தங்கள் புகழ்பெற்ற "அம்பாசிடர்" காரை எலக்ட்ரிக் வடிவில் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது, EV சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்னும் இந்நிறுவனத்தின் பங்குகள் உயரும் என்றும், இன்னும் அதிகமான லாபத்தை 
LIC பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்