மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

Siva

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (18:31 IST)
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் வைக்கப்பட்ட புகைப்படங்களை வாடிகன் முதல் முறையாக வெளியிட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவிவருகின்றன.
 
போப் பிரான்சிஸ் நேற்று காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தற்போது வாடிகன் நகரில்   பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு வண்ண உடையுடன், மரியாதை முறையில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இன்று காலை, போப்பின் இறுதிச்சடங்கு தொடர்பான ஆலோசனைகள் தொடங்கியுள்ளன. ரோமில் உள்ள முக்கிய கார்டினல்கள், போப் இறந்தபின் நடைபெறும் சடங்குகள் குறித்து திட்டமிட்டு வருகின்றனர்.
 
போப்பின் மறைவுக்குப் பிறகு, ஒன்பது நாட்கள் அனுதாப நிகழ்வுகள் நடைபெறும். இந்த நாட்களில், அவரை நினைவுகூரும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பாரம்பரிய இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என வாடிகன் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இறுதிச் சடங்குக்கான தேதி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்