தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகர்? – மதுரையை முன்னிறுத்தி அமைச்சர் தீர்மானம்

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (09:10 IST)
தமிழகத்தில் மதுரையை மையமாக கொண்டு இரண்டாவதாக புதிய தலைநகரை உருவாக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகர் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தமிழக தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில் அனைத்து துறை செயல்பாடுகளும் சென்னையிலேயே நடைபெற்று வருவதாலும், மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டும் புதிய தலைநகர் மாற்றுவது குறித்த கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் மதுரையை மையமாக கொண்டு தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இரண்டாவது தலைநகரை உருவாக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். மதுரையில் உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம், விமான நிலையம், எய்மஸ் மருத்துவமனை, 150 கி.மீ தொலைவில் தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை இருப்பதால் மதுரை தொழிற்வளர்ச்சி கேந்திரமாக விளங்குவதால் இரண்டாவது தலைநகராக மதுரையை உருவாக்குவதன் மூலம் தொழிற்வளர்ச்சி மற்றும் அதிகார பரவலாக்கத்தை எளிமைப்படுத்த முடியும் என முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்