மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல; நான் காந்தி: ராகுல்காந்தி ஆவேச பேட்டி

சனி, 25 மார்ச் 2023 (14:35 IST)
மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி என்று ராகுல் காந்தி ஆவேசமாக பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்காக ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். மேலும் சமீபத்தில் அவர் லண்டனில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் பாஜக எம்பிகள் ஆவேசம் அடைந்தனர்
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் காந்தி என்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். 
 
மேலும் சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து நான் ஒருபோதும் பயப்பட மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
நான் இந்திய ஜனநாயகத்திற்காக போராடி வருகிறேன் என்றும் என்னைப் பற்றி இன்னும் அவர்களுக்கு சரியாக புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்