ஆனால், ஆயத்தம் செய்யப்பட்டிருந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே முதல்வர் மம்தா பானர்ஜி வெளியேறினார். இதற்கு அம்மாநில கவர்னர் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இந்த ஆய்வுக் கூட்டம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யவில்லை; மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் மட்டும் மத்திய அரசு குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தேர்தலுக்கு முன்பிருந்தே பாஜக, திரிணாமுள் கட்சிக்கு இடையே மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.