மனைவியை கொன்று செல்பி எடுத்த கணவன்! – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (08:59 IST)
ஆந்திராவில் மதுபோதையில் மனைவியை குத்தி கொன்று விட்டு பிணத்துடன் கணவனே செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாவட்டம் கடப்பா பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஹரிபாபு என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் மனைவியின் நடத்தை தொடர்பாக ஹரிபாபு சந்தேகம் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் அவர் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறாக மது அருந்திவிட்டு சண்டையிட்ட போது ஆத்திரமடைந்த ஹரிபாபு வீட்டில் இருந்த கத்தியை கொண்டு மஞ்சுளாவை குத்தி கொன்றுள்ளார். பிறகு மஞ்சுளாவின் பிணத்துடன் செல்பி ஒன்றை எடுத்துக் கொண்டு தனது கையையும் வெட்டிக் கொண்டு மயங்கி விழுந்துள்ளார்.

மஞ்சுளா வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வந்து பார்த்தபோது மஞ்சுளா இறந்து கிடந்துள்ளார். மயக்கத்தில் கிடந்த ஹரிபாபுவை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்