ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் எவ்வளவு இருப்பு ? மத்திய அமைச்சகம் தகவல்

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (16:46 IST)
இந்தியாவில் மட்டும் 6771 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.228 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பல மாநில முதல்வர்கள் மக்களின் உயிரைக் காப்பாற்ற ஊரடங்கு நீட்டிப்பது குறித்துப் பேசிவருவதாக செய்திகள் வெளியாகிறது.

இந்த நிலையில், மத்திய சுகாதாத்துறை அமைச்சர் ஹர்சவர்தன், கொரோனாவை தடுக்க மேலும் 3 வாரங்கள் தேவைப்படுவதாக மாநிலங்களில் இருந்து தகவல் வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

எனவே மேலும் , மூன்று வார காலம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.
ஊரடங்கை 100% முழுமையாக பின்பற்றப்படுவதை மாநில சுகாதார அமைச்சர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் இதை மீறும்பட்சத்தில் நாம் கொரோனாவிற்கு  எதிராக நாம் பெருதும் பாதிக்கப்பட வேண்டியதிருக்கும் என எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய அமைச்சகம்,  இந்தியாவில், 16002 ரத்த மாதிரி சோதனைகளில், 0.2 சதவீதத்தினருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது  என லாவ் அகர்வால், மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் , அமெரிக்க அதிபர்,இந்திய பிரதமரிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்