கொரோனா : புதிதாக 773 பேருக்கு தொற்று... 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை தகவல்!

புதன், 8 ஏப்ரல் 2020 (16:28 IST)
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.  இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.  இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் மாநில அரசுகள் எப்போது ஊரடங்கை தளர்த்தும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது :

மாநில அரசுகளின் நிர்வாகிகள் மற்றும் வல்லுநர்களிடம் மோடி காணொலியில் ஆலோசனை நடத்தினார். அதில், மாநில அரசுகள்  ஊரடங்கை நீடிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. இக்கட்டான நேரத்தில் சில கடினமான முடிவு எடுக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

அதில், புதிதாக 773 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியாகியுள்ளதாகவும், இதுவரை  மொத்தமாக 5149 பேராக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், பலி எண்ணிக்கை 149  ஆக அதிகரித்துள்ள்ளது என தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்