குஜராத்தை அடுத்து 10% இட ஒதுக்கீடு செய்த இன்னொரு மாநிலம்

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2019 (09:22 IST)
சமீபத்தில் மத்திய அரசின் முயற்சியால் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு கொடுத்ததால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எளிதாக நிறைவேறியது.

இதனையடுத்து குஜராத் மாநிலம் நாட்டிலேயே முதல் மாநிலமாக இந்த மசோதாவை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதனால் அந்த மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினர் பயனை பெறவுள்ளனர்.

இந்த நிலையில் குஜராத்தை அடுத்து ஹிமாச்சல பிரதேச அரசும் 10% இட ஒதுக்கீட்டை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த மசோதாவை அமல்படுத்தும் இரண்டாவது மாநிலமாக ஹிமாச்சல் பிரதேசம் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்