பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கான மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகள் விழுந்ததால் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவை எதிர்க்கும் திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகளுக்கு மக்களவையில் உறுப்பினர்களே இல்லாததால் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை
இந்த நிலையில் 10% இட ஒதுக்கீட்டிற்கான மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்றாலும் மாயாவதி உள்ளிட்ட ஒருசில கட்சிகள் இந்த மசோதாவை வரவேற்றுள்ளது. எனவே திமுக உள்ளிட்ட உறுப்ப்பினரகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இன்றும் மாநிலங்களவையிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.