தேர்தலில் போட்டியிடுகிறார் ஹேமந்த் சோரன் மனைவி.. முதல்வராக திட்டமா?

Siva
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (07:49 IST)
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகிவிட்டால் முதல்வராகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது ஜார்கண்ட் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சுரங்க முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்திய பின்னர் கைது செய்தனர். இதனை அடுத்து ஜார்கண்ட் மாநில முதல்வராக அவரது மனைவி கல்பனா பதவி ஏற்பார் என்று கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் என்பவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்

இந்த நிலையில் காண்டே என்ற தொகுதியில் இடைத்தேர்தல் மே 20ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா போட்டியிடுகிறார் என்றும் அவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனால் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜார்கண்ட் மாநில அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

எம் டெக் மற்றும் எம்பிஏ படித்த கல்பனா, காண்டே தொகுதியில் போட்டியிட்டால் கண்டிப்பாக அவருக்கு அந்த பகுதி மக்கள் வெற்றியை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்